தானியங்கி வாகன எண் கண்டறிதல் செயலி மாநகராட்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்
முத்தூட் குழுமம் நிறுவனங்களின் சமூக பொறுப்புகளின் மூலம் திருச்சி மாநகர வாகன கண்காணிப்பு உயர் தர கேமரா (ANPR) தனியாங்கி வாகன எண் கண்டறிதல் செயலி வழங்கும் நிகழ்வு திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பு மண்டல மேலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் இச்செயலியை துவக்கி வைத்து அதன் செயல்பாடுகளை கேட்டு அறிந்தார்.
முத்தூட் குழுமம், நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டம் மூலம் சுமார் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள இந்த செயலியை திருச்சி மாநகர காவல்துறைக்கு உயர்ரக கேமரா (ANPR) மற்றும் தரவு சேமிப்புகளை வழங்கியது.
இத்திட்டம் குற்றங்களை கண்காணிக்க உதவும் உயர்ரக கேமராக்கள் (ANPR) மூலம் பாதுகாப்பை மேம்படுத்தும், வாகன எண் கண்டறிதல், வாகன சீர்அமைப்பு, குறுக்குவெட்டுகளில் போக்குவரத்து சமிக்ஞைகள், சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாக்கவும் இத்தொழில் நுட்பம் பயன்படுகிறது.
இந்நிகழ்வில் காவல்துறை துணை ஆணையர்கள் ஜோசப்நிக்சன், அன்பு, ஸ்ரீதேவி, காந்திமார்க்கெட் சரக காவல்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, முத்தூட் சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ஜெயக்குமார், மண்டல நிர்வாக மேலாளர் அசோக், மார்க்கெட்டிங் மேலாளர் சதீஸ் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO