திருச்சியில் ஊராட்சி உறுப்பினர்கள் 11 பேர் மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம்

திருச்சியில் ஊராட்சி உறுப்பினர்கள் 11 பேர் மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நம்பர் 2 கரியமாணிக்கம் ஊராட்சியில் சரிவர குடிநீர் விநியோகம் இல்லாததால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட சிலர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 19ம் தேதி மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் மனு மீது விசாரணை நடத்துவதற்காக திருச்சி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதாரணி நம்பர் 2 கரியமாணிக்கம் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு நேற்று வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பொதுமக்கள் எங்கள் பகுதியில் சரிவர திட்டங்கள் செயல்படுத்துவதில்லை. அதற்கு போதிய நிதியை தாங்கள் ஒதுக்கி தருவதில் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கூறி ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதாரணியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஊராட்சிமன்ற தலைவியிடம் அவர் விசாரணை செய்துவிட்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நம்பர் 2, கரியமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா சேகர் தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் என 20த்திற்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து புகார் அளித்தனர்.

இதனையடுத்து திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நம்பர் 2 கரியமாணிக்கம் வார்டு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்ற ஒத்துழைக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா சேகர் தெரிவித்தார். இதனால் நம்பர் இரண்டு கரியமாணிக்கம் ஊராட்சியில் உள்ள 11 வார்டு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து ராஜினாமா கடிதம் கொடுத்த ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கூறுகையில்.....ஷஊராட்சி மன்ற தலைவராக உள்ள கீதா சேகர் தங்களது ஊராட்சியில் கடந்த மூன்று வருடங்களாக எந்த புதிய திட்டங்களும், அடிப்படை வசதிகளும் நிறைவேற்றவில்லை. ஊராட்சி மன்ற தலைவரின் பணிகள் எது என்பது கூட கீதா சேகருக்கு தெரியவில்லை.

மேலும் ஊராட்சி பகுதிகளில் சாக்கடை, குடிநீர், மின்விளக்கு, படித்துறை போன்ற வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியிடம் கூறியதால் மன உளைச்சலுக்கு ஆளான 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்து உள்ளோம் என தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO