திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பாஸ்போர்ட் விண்ணப்ப முகாம்
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் திருச்சி பாஸ்போர்ட் சேவைகள் மையம் இணைந்து (07.02.2024) இன்று மாணவர்களுக்காக கடவுச்சீட்டு(Passport) விண்ணப்பிக்க முகாம் ஒன்றினை நடத்தியது. 2019 முதல் முகாம் ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த முகாமில் மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இது மாணவர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. முதன்முதலாக 2019ல் முகாம் நடைபெற்ற போது 425 மாணவர்கள் பயன் பெற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இவ்வாண்டிற்கான முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு K. கார்த்திகேயன், குடிமக்கள் சேவை மேலாளர், Tata Consultancy Service, கடவுச்சீட்டு சேவைகள் மையம், திருச்சி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார். கல்லூரியின் செயலர் S. ரவீந்திரன் தலைமை வகித்தார். முதல்வர் Dr. D. வளவன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் சுமார் 138. மாணவர்கள் கடவுச்சீட்டு பெற விண்ணப்பித்து பயன் பெற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலலப்பணித்திட்ட அலுவலர் Dr. K. கார்த்திகேயன் செய்திருந்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision