மாநில அளவிலான அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் எண்ணைவித்து பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

மாநில அளவிலான அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் எண்ணைவித்து பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உள் மாநில அளவிலான அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் எண்ணைவித்து பயிர்கள் விவசாயிகள் பயிற்சி ஏத்தாப்பூர் அழைத்து சென்று பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் யோக சித்ரா முதன்மை செயல் விளக்க திடல் அழைத்து சென்று ஆமணக்கு, மரவள்ளி சாகுபடி முறைகள் பற்றி விரிவாக விளக்கி கூறப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற வெள்ளிவிழா மற்றும் கருத்தரங்கு கண்காட்சியில் விவசாயிகள் கலந்துகொண்டு ஆமணக்கு, மரவள்ளி சாகுபடி பற்றிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாட்டினை இலால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுகுமார் ,லால்குடி வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் சந்திரசேகர், விஸ்வநாதன், ராஜசேகரன், எடிசன், கவிதா, பிரவின் மற்றும் அட்மா திட்ட வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் சபரிசெல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக், அட்மாதிட்ட உழவர் நண்பர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் இப்பயிற்சியில் புதூர் உத்தமனூர், தச்சன் குறிச்சி, பூவாளூர், சிறுமயங்குடி, மருதூர், செம்பரை, கோமக்குடி, நகர், திருமங்கலம், வாளாடி ஆகிய கிராம முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision