திருச்சியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு கண்டு திட்டப் பயன்களை பயனாளிகளுக்கு நலத்திட்ங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் இன்று நடைபெற்ற விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில ; மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு கண்டு
முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு 8
கிராம் தங்கத்துடன் திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் 26 நபர்களுக்கும், விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 207 நபர்களுக்கும், தசைச் சிதைவு மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு
பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 5 நபர்களுக்கும் பார்வைதிறன்
குறையுடையோர் எளிதில் பிரய்லி கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை பிரய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய வாசிக்கும் கருவி 10 நபர்களுக்கும் என 248 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் 143 படித்த பட்டதாரி ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம், பட்டதாரி அல்லாத 84 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் என 227 படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கத்தினையும் வழங்கினார்கள். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை” திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனை செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை இம்மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 2,091 மனுக்கள் பெறப்பட்டு 1,142 மனுக்களுக்கு தீர்வு
காணப்பட்டுள்ளது.இதுநாள் வரை முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பட்டா வழங்குதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் 484 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 949 மனுக்கள் பரிசீலனை செய்து நடவடிக்கையில் உள்ளது.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், எஸ்.இனிகோ இருதயராஜ், கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார்,
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல
அலுவலர் தமீமுன்னிசா, கி.ஆ.பெ. மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY