முத்துப்பேட்டை காவல் சிறுவர் சிறுமியர் மன்ற செயல்பாடுகள் குறித்து ஐஜி நேரில் ஆய்வு!

முத்துப்பேட்டை காவல் சிறுவர் சிறுமியர் மன்ற செயல்பாடுகள் குறித்து  ஐஜி நேரில் ஆய்வு!

மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டம். முத்துப்பேட்டை காவல்துணைக் கண்காணிப்பாளர் உட்கோட்ட அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து காவல்துறை தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட நிகழ்வுகளின் போது திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர். அதன் தொடர்ச்சியாக முத்துப்போட்டையில் செயல்பட்டு வரும் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் நேற்றைய தினம் (06.04.2022) நேரில் சென்று ஆய்வு நடத்தி, காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் மேலும் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால கனவுகள் மற்றும் லட்சியங்கள் குறித்து கேட்டறிந்தும், மேலும் அவற்றை நினைவாக்க எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும் ஆசிரியர்களை சந்தித்து மாணவர்கள் கல்வியில் சிறத்து விளங்கவும், அவர்கள் கட்சியங்களை நோக்கி பயணிக்கவும் தேவையான ஊக்குவிப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன், மாணவர்களை இளம் வயதிலே நல்வழிப்படுத்தி சமுதாயத்தில் அவர்கள் மிகச்சிறந்த குடிமக்களாக வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கையையும் தொடர்ந்து எடுக்குமாறு வலியுறுத்தினார். 

மேலும் முத்துப்போட்டை புதுத்தெரு பகுதியில் செயல்படுத்தியுள்ள E-BEAT செயலி, ரோந்து பணி ஆகியவற்றை தணிக்கைச் செய்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் காவல்துறையால் துவங்கப்பட்டுள்ள நூலகத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்ததுடன், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அதனை மேலும் சீரிய முறையில் பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் புத்தகங்கள் இடம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

மேலும் கடந்த 13.03.2022-ம் தேதி ஆந்திரபிரதேச மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த மனநலம் பதிக்கப்பட்ட வாசுதுபாஜி (வயது 50) என்பவர் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவர் வேதாரண்யம் பகுதியில் இருப்பதாக வாட்ஸ்சப் மூலம் தகவல் கிடைத்து நாகப்பட்டினம் காவல்துறையினர் வேதாரண்யம் சென்று அவரை அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நாகப்பட்டினம் ஆகியோர்கள் தலைமையில் நேற்று அவரது குடும்பத்தினரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO