கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை கள்ள சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை - திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி!!
கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதற்கட்டமாக திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் 25 ஆயிரம் ஆக்சிசன் தரக்கூடிய மரக்கன்றுகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என் நேரு நட்டு வைத்து தொடங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு.... "கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை தனியார் மருத்துவமனையில் கள்ள சந்தையில் விற்றால் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும், மேலும் தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டதில் திருச்சி முதன்மை மாவட்டமாக விளங்குகின்றது என்றும், தமிழக முதல்வர் தடுப்பூசிகளை வரவழைத்து உள்ளார். அது வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவாது" என்று தெரிவித்தார்.
Advertisement
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவல்லி, மாவட்ட வனத்துறை அலுவலர் சுஜாதா,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.