திருச்சியில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை
தமிழகத்தில் தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.20, ரூ.30-க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது சில மாவட்டங்களில் ஒரு கிலோ ரூ.150-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. மதுரைக்கு இன்னும் அந்த நிலைமை வரவில்லை. திருச்சியில் நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. சில்லரை விலையில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது.
திருச்சி காந்தி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு இன்று விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக தக்காளி அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்த நேரத்தில் இந்த விலை குறைவு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாளை மகராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்வதால் இன்னும் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn