திருச்சியில் 2 மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வில் இடம் ஒதுக்கீடு!

திருச்சியில் 2 மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வில் இடம் ஒதுக்கீடு!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

Advertisement

மருத்துவ கலந்தாய்வில் முதல் 18 மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

இதில் திருச்சியை சேர்ந்த 2 மாணவர்களுக்கு மருத்துவ ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. திருச்சி லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஹரி கிருஷ்ணனுக்கு சென்னை ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியிலும்,

Advertisement

மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கலையரசிக்கு மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.