அதிமுக நகர செயலாளர் வாடகைக்கு வந்தவரா - போஸ்டரால் கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பு

அதிமுக நகர செயலாளர் வாடகைக்கு வந்தவரா - போஸ்டரால் கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் துறையூர் நகர கழக செயலாளர் பதவிக்கு 13 பேர் போட்டியிட்ட நிலையில் பாலமுருகன் என்பவரை கட்சி தலைமை நகர செயலாளராக அறிவித்தது. இதனை கண்டித்து நேற்று கட்சியின் அதிருப்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதிய நகர செயலாளர் பாலமுருகன் வேலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை துறையூர் நகர் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் துறையூர் நகரத்தை வழிநடத்திச் செல்ல அதிமுகவில் நிர்வாகிகள் திறனட்டவர்களாக இருப்பதால் மதிமுகவில் இருந்தவரை வாடகைக்கு வாங்கி வந்து பாலமுருகவேல் என்பவருக்கு பதவி வழங்கிய திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக போஸ்டரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான போஸ்டரால் துறையூர் நகர அதிமுக கட்சி நிர்வாகிகள் இடையே புதிய நகர செயலாளருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO