தமிழக இடைக்கால பட்ஜெட்டில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் திருவோடு ஏந்தி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்!!

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் திருவோடு ஏந்தி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்!!

Advertisement

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் 

Advertisement

வருகின்ற 2021 பிப்ரவரியில் தமிழக இடைக்கால பட்ஜெட்டில் கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இலவச விவசாய மின் இணைப்பு டாப்செட்கோ விவசாய மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனவும், 2020 - 21 குடிமராமத்து பணிகள் சரிவர நடக்கவில்லை என்றும் நடைபெறவில்லை, தடுப்பணைகள் நல்ல தரத்துடன் நடைபெறவில்லை இதனை அரசு இதனை அரசு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், முந்திரி விவசாயம் தமிழகத்தில் அழிந்து வருவதாகவும் அரியலூரில் முந்திரி கொள்முதல் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும், கரும்பு டன்னுக்கு 4000 விலை அறிவிக்க வேண்டும் என்றும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசு 

பெற்று தரவேண்டும் என்றும்,

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நகை கடன் பயிர்களை விவசாயம் சார்ந்த கடன் தள்ளுபடி என அறிவிக்க வேண்டும் என்றும், கூட்டுறவு சொசைட்டி டாப்செட்கோ மானிய கடனை தள்ளுபடி என அறிவிக்க வேண்டும் என்றும், வேர்க்கடலைக்கு விலை உயர்த்தி தரவேண்டும் என்றும், திருச்சியில் இன்று விவசாயிகள் சாலையில் மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.