2 வாரத்தில் சின்ன வெங்காயம்  கிலோ 50 ரூபாய்க்கு வந்துடும் என - வெங்காய தரகு மண்டி செயலாளர் தங்ராஜ்

2 வாரத்தில் சின்ன வெங்காயம்  கிலோ 50 ரூபாய்க்கு வந்துடும் என - வெங்காய தரகு மண்டி செயலாளர் தங்ராஜ்
இன்னும் 2 வாரத்தில் சின்ன வெங்காயம்  கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகும் என வெங்காய தரகு மண்டி செயலாளர் தங்கராஜ் தெரிவித்தார்.
திருச்சி பழைய பால்பண்ணை வெங்காயம் மண்டிக்கு சின்ன வெங்காயம் 100 டன் இன்று வந்துள்ளது. பெரம்பலூர் துறையூர் ,நாமக்கல் பகுதியில் இருந்து 60 டன்னும் கர்நாடகா மைசூர் பகுதியில் இருந்து 40 டன்னும் வந்துள்ளது.

 சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் முதல் ரகம் 90 ரூபாயாகவும் இரண்டாவது ரகம் 70 ரூபாயாகவும் மூன்றாம் ரகம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம்  250 டன் கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ளது .மொத்த விற்பனையில் முதல் ரகம் 50 ரூபாயும் இரண்டாவது ரகம் 40 ரூபாயாகவும் மூன்றாவது ரகம் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . 

கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பெரம்பலூர் துறையூர் தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அறுவடை செய்து சந்தைக்கு வந்துவிடும். ஆகவே
இன்னும் 15 நாட்களில் சின்ன வெங்காயம் தற்போது விற்பனை செய்யப்படும் அளவில் பாதியாக விற்பனை செய்யப்படும் என வெங்காய தரகுமண்டி செயலாளர் தங்கராஜ் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH