திருச்சியில் நாடாளுமன்றத் தேர்தல் - 15 லட்சத்து 53 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

திருச்சியில் நாடாளுமன்றத் தேர்தல் - 15 லட்சத்து 53 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நாளை (19.04.2024) நடைபெற உள்ளது. இதில் திருச்சி நாடாளுமன்ற உட்பட்ட தொகுதியில் ஆண்கள் 7,57,130 பேரும், பெண்கள் 7,96, 616 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 239 பேரும் என மொத்தம் 15 லட்சத்து 53 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்க உள்ளனர்.  

பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 2547 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 84 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அந்த வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் இந்த 84 வாக்குச் சாவடிகளிலும் மத்திய அரசு பணியாளர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

இன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் மின்னணுவாக்கு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இன்று இரவுக்குள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் இந்த மின்னணுவாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக 2547 வாக்கு சாவடி மையம் உள்ளது. 3053 மிண்ணனு வாக்குபதிவு இயந்திரம், 3053 கட்டுப்பாட்டு கருவிகள், 3307 விவிபேட் பயன்படுத்தப்பட உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision