வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி குலுக்கல்
பாராளுமன்ற தேர்தல் 2024 தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் குலுக்கல் முறை (1st and 2nd Randomization) முடிவுற்று அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் பொதுப்பார்வையாளர், தினேஷ் குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் ஆகியோரின் தலைமையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குசசாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கான இறுதி குலுக்கல் (Final Randomization) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் 3056, வாக்குப்பதிவு அலுவலர்கள்- 1 3056, வாக்குப்பதிவு அலுவலர்கள் 2 3056. வாக்குப்பதிவு அலுவலர்கள் 3 3056, வாக்குச்சாவடி அலுவலர்கள் 432 ஆக கூடுதல் 12,656 அலுவலர்களுக்கும் மற்றும் நுண் பார்வையாளர்கள் 154 என மொத்தம் 12,810 அலுவலர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களே தேர்தல் நாளன்று அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ளனர் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி குலுக்கல் (Final Randomization) ஒதுக்கீட்டின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) ந.சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நெ.செல்வம், ஆகியோர் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision