சபரிமலை சன்னிதானம் 16ம்தேதி நடை திறக்கப்படுகிறது
தமிழக பக்தர்களின் விருப்பமான புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான சபரிமலை ஐய்யப்ப சன்னிதானம் பூஜைக்காக வரும் 11ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரையிலான முன்பதிவு தற்போது நடக்கிறது. அதே சமயம் முன்பதிவு நாளொன்றுக்கு 90,000 த்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என திருவாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது இதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது. பக்தர்கள் பலமணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளதுடன்.
மேலும், மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரையுள்ள முகாம்களில் சன்னிதான வளாகத்தில் காணப்படும் பக்தர் கூட்டம் குறித்த தலைல் தெரிவிக்கும் டிஜிட்டல் கையேடுகள் வைக்கவும் ஆலோசிக்படுகிறது. சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் நிலக்கல்லிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து பகதர்கள் பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிலக்கல்லில் நிறுத்த கட்டணம் பாஸ் முறையில் வழங்க ஐசிஐசிஐ வங்கி ஏற்பாடு செய் கிறது வரும் 10ம்தேதி இதற்கான திறப்புவிழா நடக்கிறது. நிலக்கல்லில் சுங்கச்சாவடி அமைகிறது பேருந்துக்கு ரூபாய் 100.ம், 4 முதல் 14 இருக்கையுள்ள வாகனங்களுக்கு ரூபாய் 50 கார் மற்றும் ஜீப்புக்கு ரூபாய் 30, ஆட்டோடிக்கு ரூபாய் 15. என பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பம்பையில் இம்முறையும் வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதியில்லை 2015ல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஹில்டாப் பார்க்கிங் மைதானம் சீரமைக்கப்பட்டாலும், இப்போதைக்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision