திருச்சியில் புரோட்டா போட்ட அண்ணாமலை

திருச்சியில் புரோட்டா போட்ட அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக பாதையாத்திரை மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி வ.உ.சி நகரிலிருந்து அண்ணா வளைவு வரை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தம், திருச்சி மாநகர் மாவட்டதலைவர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அண்ணாமலைக்கு கிரேன் மூலம் மாலை சூடியதோடு கட்சி தொண்டர்கள் மலர் தூவி வழிநெடுகே வரவேற்றனர். பின்னர் அண்ணாமலை அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா போட்டுக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த அண்ணாமலை தானும் புரோட்டா போட்டார். இதை கண்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்தினர்

முன்னதாக பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலையிடம் பெல் பாரத மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் சென்னை எண்ணூரில் அமைய உள்ள அனல் மின்சார உற்பத்தி நிலையத்தை கட்டியமைக்கும் வேலை ரூபாய் 442.75 கோடி வேலையை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளனர் அதனை பெல் நிறுவனத்திற்கு வழங்கியிருக்க வேண்டும். அதேபோல் அதில் சிபிஐ விசாரணை வேண்டும். மேலும் திருச்சி பெல் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1.43 கோடி ரூபாய் கடந்த 2019 அக்டோபர் 31ஆம் தேதி திருட்டு போனது அதனை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உடனடியாக சிபிஐ விசாரனை செய்து பெல் தொழிலாளர்கள் பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு கொடுத்தனர். திருச்சி பாரத மஸ்தூர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் இஎஸ்ஐ துணை மண்டல அலுவலகம் அமைக்கவும் இ எஸ் ஐ மருத்துவமனையை மருத்துவ கல்லூரியாக தர உயத்த வேண்டும்.

திருச்சி பெல் நிறுவனத்திற்கு டான் ஜெட்கோ செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ4000 கோடியை தமிழக அரசு விடுவித்து தொழிலாளர் மற்றும் தொழிலாக நலன் காக்க வேண்டும். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கியை ராணுவத்திற்கு ஆடர் பெற்று தந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் அதேபோல் திருவெறும்பூர் பகுதியில் இயங்கி வரும் பெல், துப்பாக்கி தொழிற்சாலை, எச் இ பி எப் உட்பட தனியார் நிறுவனங்கள் பணி புரியும் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வர ஏதுவாகவும் பொதுமக்களின் வசதிக்காகவும் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு வண்டி, செம்மொழி விரைவு வண்டி நின்று செல்ல வேண்டும். 

திருச்சி மொண்டிபட்டியில் உள்ள டிஎன்பிஎல் பகுதி இரண்டு தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையானது மூச்சடைக்கும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொழிற்சாலை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் மனு கொடுத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision