திருச்சி மாநகராட்சி 5 கோட்ட தலைவர்கள் யார்?நாளை தேர்வு

திருச்சி மாநகராட்சி 5 கோட்ட தலைவர்கள் யார்?நாளை தேர்வு
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது . இதில் திமுக கூட்டணி 59 இடங்களை கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இடங்களில் அதிமுக மூன்று இடங்களையும், சுயச்சை இரண்டு இடங்களையும், ஒரு அமமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர மேயராக அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார். (33 வார்டு ) திவ்யா திருச்சி மாநகராட்சி துணை மேயர். ஆனால் முதல் முறையாக திருச்சி மாநகராட்சியில் திமுக மேயர் துணை மேயர் பதவிகளை கைப்பற்றியது.

மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் நேற்று (28.03.2022) நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சியினர் 59 இடங்களை கைப்பற்றிய நிலையில், கூச்சல் குழப்பமின்றி முதல் கூட்டம் நடந்து முடிந்தது. இந்நிலையில் நாளை (30.03.2022) கோட்டத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது

65 வார்டுக்கு உட்பட்ட பகுதியை ஏற்கனவே நான்கு கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. தற்போது ஐந்தாவதாக ஒரு புதிய கோட்டமாக திருவெறும்பூரை உருவாக்கபட்டுள்ளது. ஒவ்வொரு கோட்டத்திற்கும் 13-வார்டுகளாக பிரிக்கபட்டு அதற்கான கோட்ட தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கோட்டத் தலைவர் தேர்தல் நாளை திருச்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெறும். மேயர் துணை மேயர் தேர்ந்தெடுப்பதிலேயே இரண்டு அமைச்சர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தற்போது 5 கோட்ட தலைவர்களில் 3 அமைச்சர் நேரு ஆதரவாளர்களும், இருவர் மகேஷ் ஆதரவாளர்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோட்டத்தைப் பொருத்து அளவு ஆண்டாள் ராம்குமாரும், அரியமங்கலம் கோட்டத்திற்க்கு மதிவாணனும் கோ.அபிஷேகபுரத்திற்க்கு நாகராஜனும், பொன்மலை கோட்டத்திற்கு துர்க்காதேவி புதிய கோட்டமான திருவெறும்பூருக்கு தர்மராஜன் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்து கோட்ட தலைவர்களில் இரண்டு பெண்களும் 3 ஆண்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 59 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில் இவர்கள் ஐவரும் கோட்ட தலைவராவது உறுதியாகிவிட்டது. சீனியர் கவுன்சிலர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டுவிட்தாக தகவல் வெளியாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO