டிரோன் வாங்கலியோ, டிரோன் வாங்கலியோ விவசாயிகளுக்கு ரூபாய் 5 லட்சம் மானியம் அமைச்சர் அதிரடி !!

டிரோன் வாங்கலியோ, டிரோன் வாங்கலியோ விவசாயிகளுக்கு ரூபாய் 5 லட்சம் மானியம் அமைச்சர் அதிரடி !!

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது... பயிர்களுக்கு பூச்சிமருந்து தெளித்தல், பூச்சி, நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை விவசாயிகள் எளிதில் செய்வதற்காக, மானியத்தில் டிரோன் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நடப்பு 2023-24ம் நிதியாண்டில், மானியத்தில் டிரோன்கள் வாங்க விரும்பும் சிறு, குறு, பட்டியலின பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூபாய் 4 லட்சம் வழங்கப்படும். பட்டியலின, பழங்குடியின பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியமும் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

விவசாயக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், கிராமப்புற இளைஞர் களும் டிரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம். அவர்களுக்கு 40 சதவிகித மானியம் அல்லது ரூபாய் 4 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். டிரோன்களைக் கொண்டு வேளாண் எந்திர வாடகை மையம் அமைக்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் மானியம் வழங்கப்படும்.

டிரோன் வாங்க வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் இருந்து 3 சதவிகித வட்டி மானியம் வழங்கப்படும். தமிழகத்தில் 2 டிரோன் நிறுவனங்களின் 2 மாடல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் விருப்பமுள்ள நிறுனத்தை விவசாயிகள் தேர்வு செய்து கொள்ளலாம். டிரோன் வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து, உரிய வழிமுறைகளின்படி மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision