திருச்சி மாநகராட்சியின் மேயர் ஆணா பெண்ணா?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சிகளில் இட ஒதுக்கீடு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநகராட்சிகள் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு மேலும் பொதுப்பிரிவு ஆகியவற்றையும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் ஏற்கனவே பெண் மேயர்களே இருந்துள்ளனர். திருச்சி மாநகராட்சி பெண்களுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது.
சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் எஸ்.சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதில், சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் எஸ்.சி பெண்களுக்கும், ஆவடி மாநகராட்சி எஸ்.சி (பொது) பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்திலுள்ள இருபத்தி ஒரு மாநகராட்சியில் 12 மாநகராட்சிகளுக்கு தற்போது இட ஒதுக்கீடு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவைகள் பொதுப்பிரிவில் உள்ளது.அதில் திருச்சி மாநகராட்சியும் தற்போது பொது பிரிவில் உள்ளது . தற்போது ஆண் மேயரா,பெண் மேயரா என்ற கேள்வி எழுந்தாலும் ஆளும் அரசின் உள்ளூர் அரசியல்வாதிகள் அனைவரும் திருச்சி மாநகராட்சி அடுத்த மேயர் ஆண் என ஆணித்தரமாக தெரிவித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...