திருச்சியில் திமுகவினர் பணம் பட்டுவாடா வீடியோ வெளியீடு - விசாரணை
திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையை வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் பரப்புரையில் ஒவ்வொரு விதமான நூதன பரபரப்புரையும் அரசியல் தலைவர்கள் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டும் வந்தனர். நாளை(17.02.2022) மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது .
வாக்காளர்களை கவருவதற்கு பல விதமான தொழில்நுட்பங்களுடன் கவர்ந்தனர்.தற்போது அவர்களைக் 'கவருடன்' கவர்வதாக வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
திருச்சியில் 26வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் பட்டுவாடா வீடியோ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் பணம் பட்டுவாடா செய்து வெற்றி பெறுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகளும் எழுந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn