ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு - கிருமி நாசினி தெளித்து சுத்தம்!!

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு - கிருமி நாசினி தெளித்து சுத்தம்!!

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடந்துவந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவுபெற்றது.

Advertisement

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் 21 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 14ம் தேதியன்று பகல்பத்து திருவிழா தொடங்கியது.

முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு (டிசம்பர் 2020) 25ம்தேதி அதிகாலை நடந்தது. இதையடுத்து நடைபெற்றுவந்த இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம் மற்றும் நேற்றையதினம் நம்பெருமாள் தீர்த்தவாரியும் வைபவமும் வெகுசிறப்புடன் நடைபெற்றதுடன், இராப்பத்து திருநாளின்போது தினசரி திறக்கப்பட்டுவந்த பரமபதவாசலும் நேற்று இரவு 8 மணியுடன் மூடப்பட்டது. 

Advertisement

21 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது. காலை நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவத்தோடு இன்று நிறைவு பெற்றது.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணி முதல் மூலாஸ்தான சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கோயில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.