விழிப்புணர்வு உடையுடன் மதுபானம் வாங்கிய சர்ச்சை -  பிரச்சார குழு நீக்கம்

விழிப்புணர்வு உடையுடன் மதுபானம் வாங்கிய சர்ச்சை -  பிரச்சார குழு நீக்கம்

திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமந்தோறும்  8- கிராமிய பிரச்சார கலைக்குழுவினர் கடந்த சில தினங்களாகமணப்பாறை, முசிறி, தொட்டியம், திருவெறும்பூர், துறையூர், லால்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் சர்மிளா சங்கர் என்பவர் தலைமையிலான பிரச்சார கலைக்குழு நெறிமுறைகளை மீறி அரசு மதுபான கடையில் இல்லம் தேடி கல்வி வாகனத்துடன் சென்று, விழிப்புணர்வு உடையணிந்து மதுபானங்கள் வாங்கிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பிரச்சாரக் குழுக்களில் சர்மிளா சங்கர் என்பவர்  தலைமையிலான பிரச்சார குழு, கலைக்குழுக்கான நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் அந்த பிரச்சார குழுவை விழிப்புணர்வு பிரச்சாரத்திலிருந்து முழுமையாக நீக்கி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையில் மது பாட்டில்களை வாங்கி பிரச்சார வாகனத்தில் செல்லும் வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை இல்லம் தேடி கல்வி இழந்ததை மீட்க. என்ற முழக்கத்துடன் தமிழக அரசு தமிழகம் முழுவதும் கிராமிய கலை குழுவினர் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், கலைக்குழுவினர் பிரச்சார உடையணிந்து சென்று மதுபானம் வாங்கியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn