திருச்சி மாநகரத்தில் காணாமல் போனவர்கள் கண்டுபிடுத்த போலீசார்
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்தும், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கவும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதின்பேரில்,
திருச்சி மாநகரத்தில் இந்த மாதத்தில் காணாமல்போன 20 நபர்களில் 16 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தூரைச் சேர்ந்த கிருத்திகா (28) என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மூன்று நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல் கடந்த 21.01.22-ம் தேதி அரியமங்களம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரியமங்களம் திடீர்நகரைச்சேர்ந்த இரண்டாவது வகுப்பு படிக்கும் பையனும், ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தையும் காணாமல் போனதாக அவரது தாயார் கொடுத்த புகாரின்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சொந்தக்காரர்கள் வீடுகளிலும் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளிலும் தேடி 24 மணி நேரத்தில் சிறுவன் மற்றும் சிறுமியை கண்டுபிடித்து அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் ஆளிநர்களை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். மேலும் இதுபோன்ற காணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn