முதியவரின் விருப்பத்தை சுடுகாட்டில் நிறைவேற்றிய திருச்சி அகோரி

முதியவரின் விருப்பத்தை சுடுகாட்டில் நிறைவேற்றிய திருச்சி அகோரி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60). டீ மாஸ்டரான இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உறவினர்கள் வழக்கு போல் தங்களது இறுதி சடங்கை செய்து திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு தகனம் செய்ய அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அவரது உறவினர் இறந்த பாலசுப்ரமணியனின் உடலுக்கு அகோரி முறைப்படி ஆன்மா சாந்தி பூஜை செய்து தகனம் செய்ய வேண்டும் என திருச்சி அரியமங்கலத்தில் உள்ள அகோரி மணிகண்டனிடம் கேட்டுக் கொண்டனர்.

அதன்பேரில் காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் தன் சீடர்களுடன் உடல் முழுவதும் திருநீர் அணிந்து கொண்டு சுடுகாட்டிற்கு வந்தார். அப்போது இறந்த பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் தங்களது இறுதி சடங்கை முடித்த பிறகு அகோரி மணிகண்டன் தகன மேடையில் உள்ள பாலசுப்ரமணியனின் உடல் மீது அமர்ந்து மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார்.

அப்போது சக அகோரிகள் தமரா மேடம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும், ஹர ஹர மகாதேவா என முழங்கினர். இறுதியில் பாலசுப்பிரமணியனின் சடலத்திற்கு தீபாரதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்தார். காசியில் நடைபெறக்கூடிய இந்த ஆன்ம சாந்தி பூஜையானது, திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அரங்கேறிய சம்பவம் சற்று திகிலூட்டும் விதமாக இருந்தது.

மேலும் அகோரி மணிகண்டன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சுடுகாட்டில் தன் தாயார் சடலம் மீது அமர்ந்து ஆன்ம சாந்தி பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision