திருச்சி தேசிய கல்லூரி - சென்னை டார்ஜெனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருச்சி தேசியக் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை சென்னை டார்ஜெனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Targenix private limited) நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஒப்பந்தத்திற்கான சிறப்பம்சம் குறித்து டாக்டர் சி.பிரசன்னகுமார் கூறுகையில்.. நிறுவனமானது தற்போது காளான் உற்பத்தியில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஒப்பந்தத்திற்கான மிக முக்கிய நோக்கமே மாணவர்களிடையே தொழிற்கூடங்களை பற்றிய தெளிவையும் இந்த காளான் உற்பத்தியில் அவர்களுடைய திறனை மேம்படுத்த உதவும் வகையில் அமைந்திட வேண்டும் என்பதற்காக தான்
காளான் உற்பத்தி அதனுடைய வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக தேசிய கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் கல்லூரியின் வளாகத்தில் உள்ளே நிறுவனத்தின் ஒரு பிரிவைத் தொடங்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி மேலும், காளான் வளர்ப்பில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தமானது உதவும்.
காளான் உற்பத்தியில் அதனுடைய வெப்பநிலையை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. குறிப்பாக காளான் 18 முதல் 20 டிகிரி செல்சியஸில் வளரும் நிலையில் 24 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காளான் வளர்ப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளனர். முதுகலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் தேவையான வகையிலும் இன்னும் பயிற்சிக்கான சிறப்பம்சமாக அந்நிறுவனத்தில் உள்ள ஆய்வுக் கூடங்களிலும் தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒப்பந்தமானது மூன்று ஆண்டுகளுக்கு கையெழுத்திடப்பட்டது. கல்லூரியின் வளாகத்தில் அமைக்கப்பட இருக்கும் இப்பிரிவில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிப்பதோடு அவர்களுக்கு ஊக்கத் தொகையோடு பயிற்சி வழங்கி, இத்துறையில் மேலும் ஆராய்ச்சிகள் செய்திட உதவும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்திட்டுள்ளது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO