உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய திருச்சி முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம்

உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய திருச்சி முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம்

திருச்சி மருத்துவ சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் திருச்சி மாநகரம் காட்டூர் கிளை அமைப்பின் சார்பில் தைத்திருநாள் பொங்கல் விழாவிற்கு சிறப்பு தொகுப்பு 60 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவானது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. 

கொரோனா பகுதிநேர முடக்கத்தால் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் வேலையை தொடர செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்விழாவில் தலைவர் செல்வராஜ் செயலாளர்  தர்மலிங்கம் பொருளாளர் முருகேசன் துணை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவினை காட்டூர் அமைப்பாளர் முருகேசன் மற்றும் இளைஞரணி ஏற்பாடு செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn