2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் தொடங்குவதற்கான  அறிவிப்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்

2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் தொடங்குவதற்கான  அறிவிப்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்

2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கு 03.01.2022 முதல் புதிய தொழிற்பள்ளிகள் 
தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய 
தொழிற்பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் 
ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 2022 - 2023ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள்/கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். NEFT மூலம் தொழிற்பள்ளி பணம் (விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம்) செலுத்தும் போது தொழிற்பள்ளியின் வங்கி கணக்கிலிருந்து transfer செய்யப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் எந்த தொழிற்பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை Bank Statement-ல் கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலிருந்து 
RTGS/NEFT மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள prospectus-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கக் வேண்டிய கடைசி நாள் 30.04.2022 ஆகும். இதற்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் தொலைபேசிஎண் 0431 -242 2171, Email id : rjd.trichy@gmail.com மற்றும் திருச்சி மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn