திருச்சியில் பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகன கண்காட்சி.

திருச்சியில் பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகன கண்காட்சி.

நாடு சுதந்திரம் அடைந்த நாட்களில் வந்த கார் முதல் பழைய கார்கள் மற்றும் 1942 பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களின் கண்காட்சி திருச்சி டி ஜே அழகேந்திரன் ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக திருச்சி பறவைகள் சாலை பகுதியில் இன்று முதல் துவங்க உள்ளது.

இந்த கண்காட்சி குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் கூறுகையில்..... இந்த கண்காட்சியில் பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட 6 கார்களும், 66 இருசக்கர வாகனங்களும் மற்றும் பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி, கடிகாரம், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெறுகிறது. இந்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக இலவசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலத்தில் உள்ள மாணவ மாணவிகள் இளைஞர்கள் உள்ளிட்டோர் பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் தற்போதைய குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இன்டர்நெட்டில் மூழ்கி உள்ளனர்.

அதனை விட்டு இதுபோல் வரலாற்று சிறப்புமிக்க பழைய பொருட்களை சேகரிப்பு என்பது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை முறையை மாற்றும் என தெரிவித்தார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision