உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - திருச்சியில் முதல்வர் பேட்டி

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - திருச்சியில் முதல்வர் பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை இன்று(09.06.2023) ஆய்வு செய்தார். பின்னர் திருச்சிராப்பள்ளி பழைய விமான நிலைய கூட்ட அரங்கில் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்...... டெல்டா மாவட்டங்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக தி.மு.க அரசு செயல்படும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படாததற்கு ஆளுநர் தான் காரணம் என உயர்கல்வி துறை அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அதே குற்றச்சாட்டை நானும் வைக்கிறேன்.

இது போன்ற பிரச்சனைகளுக்காக தான் பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மேகதாது அணை விவகாரத்தில் அதை கட்ட கூடாது எப்படி கலைஞர் உறுதியாக இருந்தாரோ அதே உறுதியோடு நாங்கள் இருக்கிறோம். விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்துவது ஆய்வில் உள்ளது. டெல்டா மாவட்ட்டங்களில் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் 96 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் ஒரு சில நாட்களில் நிறைவடையும். மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று விட்டது.அவர்கள் கூறிய சிறிய குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விட்டது.

தமிழக ஆளுநர் பல்வேறு மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதால் தமிழக அரசு நீதிமன்றத்தை நாடலாம் என சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். கவர்னரை மாற்ற கோரிக்கை வைப்பீர்களா குறித்த கேள்விக்கு நாங்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் இந்த பிரச்சனை இல்லை. தமிழக அமைச்சரவையில் மாற்றம் உள்ளதா உதயநிதி துணை முதல்வர் ஆவாரா என்ற கேள்விக்கு இப்போதைக்கு வரும் சேதி ஒன்றிய அரசில் தான் அமைச்சரை மாற்றம் இருப்பதாக சேதி வருகிறது என்றார்.

அமுல் நிறுவனம் தமிழகத்தில் வருவது எதிர்க்கிறோம் அதில் உறுதியாக இருக்கிறோம். ஆவின் நிறுவனத்தில் சிறுவர்கள் வேலை செய்வது குறித்து அத்துறை அமைச்சர் மறுத்துள்ளர்.மேலும் அந்தக் காட்சிகள் Fake ஆக வெளியிடப்பட்டது என முதல்வர் பதிலளித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn