சமூக நீதி மற்றும் மனித உரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சமூக நீதி மற்றும் மனித உரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி தூய வளனார் கல்லூரியில் இணை முதல்வர் முனைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தலைப்பில் மனித உரிமை ஆணைய சட்டம் மற்றும் ஆணைய செயல்பாடுகள் மனித உரிமைகளான வாழ்வதற்கான உரிமை சுதந்திர உரிமை சமத்துவ உரிமை தனி நபர் மாண்பு குறித்தும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்கு சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினால்

சமுதாயத்தில் ஏற்படும் குற்றங்கள் மற்றும் குழந்தை நலக்குழு பணிகள் குறித்தும், திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சிறப்பு அரசு வழக்கறிஞர் சக்திவேல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலின சமத்துவம், மோட்டர் வாகன சட்டம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.

காவல் ஆய்வாளர் வசுமதி வரவேற்றார் சிறப்பு உதவி ஆய்வாளர் அழகர்சாமி நன்றி கூறினார். குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 பெண்களுக்கான இலவச தொலைபேசி எண் 181 போதைப்பொருள் சம்பந்தமான தொலைபேசி எண் 10581 குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர் மகேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision