கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த வடமாநில வாலிபர் மற்றும் 16 சிறுவர்களுக்கு அபராதம்

கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த வடமாநில வாலிபர் மற்றும் 16 சிறுவர்களுக்கு அபராதம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரயில் நிலையத்தில் கஞ்சா, மது பாட்டில்கள் மற்றும் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 02.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வந்தது. 

இந்த ரயிலிருந்து இறங்கி வரும் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் 16 சிறுவர்களுடன் வந்தார். அந்த வாலிபரிடம் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் கேட்டபோது ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்ததாக தெரிவித்தார். ஆன்லைன் பதிவு டிக்கெட்டை செல்போனில் காண்பிக்க கூறியபோது இல்லை என்று தெரிவித்துள்ளார் அதனைத் தொடர்ந்து  வடமாநில வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆரூன் தர்ஷத் (33) என்பதும், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதிற்குட்பட்ட 16 சிறுவர்களையும் தஞ்சாவூருக்கு சென்று உருது கற்க அழைத்து வந்ததாக வாலிபர் கூறினார்.

பின்னர் வாலிபர் உட்பட உட்பட 17 பேருக்கும் 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உருது கற்க வந்தனரா அல்லது கொத்தடிமைகளாக வேலைக்கு அழைத்து வந்தனர் என்ற குழப்பம் நிலவியது. அதனைத் தொடர்ந்து பிடிபட்ட 17 பேரும் திருச்சி குழந்தைகள் நல குழுவினரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். மேலும் கொல்கத்தாவில் இருந்து பல மாநிலங்களை தாண்டி ரயிலில் எப்படி ஓசி பயணம் மேற்கொண்டு மேற்கொள்ள முடிந்தது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn