திருச்சியில் வெள்ளகாடாக மாறிபோன விவசாய நிலங்கள் - 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு

திருச்சியில் வெள்ளகாடாக மாறிபோன விவசாய நிலங்கள் - 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு

திருச்சி மற்றும் கரூா் மாவட்ங்களில் இரண்டு நாட்களாக இரவு விடிய ,விடிய பெய்த தொடா் மழையால் இப்பகுதியில் உள்ள உய்யக்கொன்டானில் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டு, ஶ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூா் ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாலம், புலிவலம், சுப்பராயன் பட்டி கிராமபகுதிகளில் உள்ள பாசன கால்வாய்களிலும், வடிகால் ஓடைகளிலும் பெருகி வந்த வெள்ள நீா் வடிய வழியில்லாமல் இப்பகுதிகளில் உள்ள கொடியாலம், புலிவலம் கிராமங்களின்

குடியிருப்புகளுக்குள் புகுந்ததோடு இப்பகுதிகளில் சாகுபடி செய்யபட்டு இருந்த ஆயிரகணக்கான ஏக்கா் வாழை, மற்றும் நெற்பயிா், நாற்றங்கால்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு சம்பா அறுவடை நேரத்தில் பெய்த தொடா் மழையால் சாகுபடி செய்த நெற் கதிா்களை அறுவடை செய்ய முடியாமல் வயல்களிலேயே நெற் கதிா்கள் முளைத்து பெரும் இழப்புக்கு ஆளான விவசாயிகள் இந்த ஆண்டு விதை விதைத்த சில நாட்களில் போட்ட விதைகள் அழுகி தொடா் இழ்ப்புகள் ஏற்பட்டுள்ளதை கன்டு பெரும் மன வேதணை அடைந்துள்ளனா்.

மீன்டும் விதைத்தால் அடுத்தடுத்து பெய்யும் மழையால் தொடா் இழப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனா். இப்பகுதியில் பிரதன பாசன ஆறாக இருந்து உய்யக்கொன்டான் கடந்த 2019−2020,ல் குடிமராத்து திட்டத்தில் தூா் வாரப்பட்டது. இதன் முக்கிய வடிகாலன புலிவலம் மனற் போக்கி வடிகால் கடந்த 2020−2021−ல் குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரப்பட்டாலும், இவ்வடிகாலில் கலக்கும் கொடியாலம் பாசன கால்வாய்களான பச்சடி கால்வாய், படிதுறை கால்வாய், செல்லாயி அம்மன் கோவில் கால்வாய்களும் இதன் வடிகாலன கொடியாலம் வடிகால் ஓடையும், இதே போல் புலிவலம், சுப்பராயன்பட்டி பாசன கால்வாய் இதன் வடிகால்கள் மற்றும் இப்பகுதியில் கொடியாலம்,

புலிவலம் இடையே ஓடும் கொடிங்கால் வடிகால் ஓடையிலும்  மன்டி கிடக்கும் புல், பூண்டுகள், செடி கொடிகளை அகற்றி தூா் வாரப்படாததால் வெள்ள நீா்  வடிய வழியில்லாமல் கிராம குடியிருப்புகளுக்குள்ளும், வயல் பகுதிகளிலும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவுள்ளது. இதே போல் அந்தநல்லூா் ஒன்றித்திற்க்குட்பட்ட மேக்குடி, கீழ்பத்து பகுதிகளிலும் மாநகராட்சிகுட்பட்ட அரவாணூா் பகுதிகளிலும் வயல் பகுதிகளுக்குள் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்திவுள்ளது. மாவட்ட நிா்வாகம் வரும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் முன் இப்பகுதிகளில் உள்ள பாசன, வடிகால் ஓடைகளை போா்கால அடிப்படையில் தூா் வாாிட உாிய நடவடிக்கை மேற்கொள்ள வேன்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn