வரம் தருமா வரும் வாரம் வரிசை கட்டும் இரண்டாம் காலாண்டு முடிவுகள் 7 நிறுவனங்கள் !!
வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமை திகைக்க வைத்தன இந்திய பங்குச்சந்தைகள் இஸ்ரேல் பாலஸ்தீன போரால் பதட்டமானது பங்குச்சந்தை சென்செக்ஸ் 483 புள்ளிகளும், நிஃப்டி 141 புள்ளிகளும் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. வரும் வாரம் வரவிருக்கும் இரண்டாம் காலாண்டு முடிவுகள் என்னவாகும் கை கொடுக்குமா ! காலை வாருமா ? பார்ப்போம். அடுத்த வாரம் தங்கள் முடிவுகளை அறிவிக்கப் போகும் சில நிறுவனங்கள் இங்கே.
KPI கிரீன் எனர்ஜி லிமிடெட் : நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூபாய் 3,252 கோடி, இது ஒரு ஸ்மால் கேப் நிறுவனமாக மாறுகிறது. திங்கட்கிழமை இந்நிறுவனப்பங்குகள் 0.28 சதவிகிதம் உயர்ந்து BSEல் 906.45க்கு வர்த்தகத்தை நிறைவு செய்த்தது. Q2 FY24க்கான முடிவுகளை நேற்று அக்டோபர் 09 நிறுவனம் அறிவித்தது.
டிசிஎஸ் : நிறுவனம் லார்ஜ் கேப் வகையைச் சேர்ந்தது, சந்தை மூலதனம் ரூபாய் 13,24,649 கோடி திங்கட்கிழமை பங்குகளின் விலை 0.47 சதவிகிதம் உயர்ந்து BSEல் 3,637.25. Q2 FY24 க்கான முடிவுகளை அறிவிக்கும் தேதி அக்டோபர் 10 நாளை என நிறுவனம் அறிவித்துள்ளது. மோதிலால் ஓஸ்வால் செக்யூரிட்டீஸ் டிசிஎஸ் 10.9 சதவிகித ஆண்டு லாபம் ரூபாய் 11,610 கோடி 9.2 சதவிகித ஆண்டு விற்பனையில் ரூபாய் 60,400 கோடி மற்றும் EBIT மார்ஜின் 24 சதவிகிதமாக இருக்கிறது.
இன்ஃபோசிஸ் : நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூபாய் 6,13,924 கோடியை கொண்ட லார்ஜ் கேப் நிறுவனமாக உள்ளது. திங்கட் கிழமை பங்கு 0.27 சதவிகிதம் குறைந்து BSEல் 1,474.60ல் வர்த்தகத்தை நிறைவு செய்த்தது இந்நிறுவனம் அக்டோபர் 12ம் தேதியை Q2 FY24 முடிவுகளை அறிவிக்கும் தேதியாக நிர்ணயித்துள்ளது.
ஏஞ்சல் ஒன் லிமிடெட் : நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூபாய் 16,637 கோடி, மிட் கேப் நிறுவனம். திங்கட்கிழமை இந்நிறுவனப்பங்குகள் BSEல் 3.19 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 2040.65 ஆக முடிந்தது. Q2 FY24 க்கான முடிவுகளை அறிவிக்கும் தேதியாக அக்டோபர் 12ம் தேதியை நிறுவனம் அறிவித்துள்ளது.
HDFC ஆயுள் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் : நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூபாய் 1,35,884 கோடியாக இருக்கிறது, இது ஒரு லார்ஜ் கேப் நிறுவனம் திங்கட்கிழமை இந்நிறுவனப் பங்குகள் 2.50 சதவிகிதம் குறைந்து BSEல் ரூபாய் 615.15க்கு வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது,
Q2 FY24 க்கான முடிவுகளை அறிவிக்கும் தேதியாக அக்டோபர் 13ஐ நிறுவனம் அறிவித்துள்ளது. TATA Steel Long Products Ltd : இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூபாய். 3,607.7 கோடி, இது ஒரு லார்ஜ் கேப் நிறுவனமாக இருக்கிறது. திங்கட்கிழமை இந்நிறுவனப் பங்குகள் 2.4 சதவிகிதம் குறைந்து BSEல் 783.55 ஆக இருந்தது. Q2 FY24 க்கான முடிவுகளை அறிவிக்கும் தேதி அக்டோபர் 13 என நிறுவனம் அறிவித்துள்ளது.
டிமார்ட் : நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூபாய் 2,49,230 கோடியாக உள்ளது, இது ஒரு ஸ்மால் கேப் நிறுவனமாக மாறியுள்ளது. திங்கட்கிழமை இந்நிறுவனப்பங்குகள் 0.93 சதவிகிதம் குறைந்தது BSEல் ruupaay 3,798.20 ஆக நிறைவு செய்தது. Q2 FY24 க்கான முடிவுகளை அறிவிக்கும் தேதியாக அக்டோபர் 14ம் தேதியை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்கள் சந்தைகளின் போக்கை நிர்ணயிக்கும் மிக முக்கிய நிறுவனங்களாக கருதப்படுவதால் வரும் வாரம் இதன் முடிவுகளைப்பொறுத்து சந்தைகளின் போக்கு இருக்கும் அதுவரை காத்திருக்கலாமே !.