மாணவிகளும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறது மிகுந்த வருத்தமளிக்கிறது- ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சு

மாணவிகளும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறது மிகுந்த வருத்தமளிக்கிறது- ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில்(எஸ்.ஆர்.எம் ) போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்வில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஐஜி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.அப்போது சாலை பாதுகாப்பு, சைபர் குற்றம், போதைப்பொருள் மற்றும் ஈவ்டீசிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

 

இதையடுத்து ஐஜி பாலகிருஷ்ணன் பேசியபோது, போதை பழக்கத்தால் மனரீதியாகவும்,உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. 

மாணவர்கள் மட்டுமில்லாமல் மாணவிகளும் போதை பழக்கத்திற்க்கு அடிமையாகி வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சகமாணவர்கள் போதைப் பழக்கத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்களை மாற்றுவது மாணவர்களாகிய உங்களது கடமையாகும். போதை பழக்கத்திற்கு அடியானால் குற்ற உணர்வு குறித்து தெரியாது . போதையினால் ஏற்படும் சந்தோஷம் சுயமரியாதையினை இழக்கின்றனர் என பேசினார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, போதை பழக்கத்தை ஒழிக்க காவல் துறையுடன் மாணவர்களும் இணைய வேண்டும். போதைப்பொருள்களை கல்லூரி மற்றும் பள்ளி சுற்றுவட்டார பகுதியில் விற்பவர்களை தெரிந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தமிழக டிஜிபி உத்தரவுபடி போதைப்பொருள் தடுப்பு குறித்து தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்து வருகிறோம்.

   போதைப்பொருள் விற்பவரை குறித்து தகவல் கொடுத்தால் அவர்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும்.தகவல் கொடுப்போரை விட போதைப்பொருள் விற்பவரை்ஒழிப்பது தான் காவல்துறைக்கு முக்கியம் அப்போதுதான் முற்றிலுமாக 

கஞ்சா வை ஒழிப்பதற்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கென விரைவில் மொபல் ஆப் துவங்கப்படும்.

திருச்சி மத்திய மண்டலத்தில் இந்தாண்டு கஞ்சா , குட்கா தொடர்பாக 700 வழக்குகள் பதியப்பட்டும், ரூ. 2 கோடி மதிப்பிலான 1800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஒழிக்க மாணவர்களும், காவல்துறையினரும் கைகோர்த்து செயல்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையுமென திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஸ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் குழுமத்தின் திருச்சி வளாக இயக்குநர் டாக்டர் மல்முருகன், இணை இயக்குநர் டாக்டர் பாலசுப்ரமணியன்,டாக்டர் சேதுராமன் முதன்மை இயக்குநர் SRM, இராமாபுரம் மற்றும் திருச்சி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இறுதியாக பொறியியல் கல்லூரி மாணவர்களின் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO