தற்காலிக செவிலியர்களுக்கு 3 மாதம் ஊதியம் வழங்காமல் பணிநீக்கம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மற்றும் கொரோனா வார்டில் பணியாற்றுவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு 60 பேர் தேர்வு செய்யப்பட்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதுடன் தற்போது கொரோனா முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவ்வாறு சேவை மனப்பாங்குடன் பணியாற்றிவந்த செவியர்களின் ஒப்பந்தக்காலம் நேற்றுடன் முடிந்தநிலையில் அவர்களை கண்டுக்கொள்ளாமல் அவர்களுக்கு வீட்டுக்கு அனுப்பியது திமுக அரசு, ஏற்கனவே உரியகாலத்தில் சம்பள பட்டுவாடா இல்லாமல், செவிலியர்கள் பலரும் கொரோனா பாதிக்கப்பட்டும் பணியாற்றி வந்த நிலையில் திமுக அரசு தங்களை கைவிட்டுவிட்டதாகக்கூறி, தங்களுக்கு ஒப்பந்த செவிலியர் பணியிடத்தை மீண்டும் வழங்ககோரி இன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.
செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர். 3 மாதமாக சம்பளமும் வழங்காவிட்டாலும் சேவை செய்து வந்தோம் என்றும், கொரோனா இல்லையென்பதற்கு காரணமான தங்களை பணிநீக்கம் செய்துள்ளது இந்த அரசு என்றும், கொரோனா முடிந்துவிட்டது என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டால் எங்கள் கதி என்னாவது என்று வினா எழுப்புகின்றனர் தற்காலிக செவிலியர்கள்.
இதுமட்டுமன்றி திருச்சி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 154 காலி பணிஇடத்தில் ஓராண்டு சிறப்பாக பணியாற்றிவந்த தங்களில் 7 பேருக்கு மட்டுமே பணிவழங்கி பாரபட்சம் காட்டியுள்ளதாகவும், தங்களுக்கான பணிவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாமல் தங்களுக்கு பணிபுரிந்ததற்கான சான்றிதழும் வழங்காமல் தங்களை தூக்கி எறிந்துவிட்டதாகவும், அரசு தங்களுக்கு மீண்டும் பணிவழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO