திருச்சி காந்தி சந்தை விரைவில் பஞ்சப்பூருக்கு மாநகராட்சி அறிவிப்பு
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மொத்த மற்றும் சில்லறை காய்கறி சந்தை உள்ளிட்டவைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் 70% மேற்பட்ட பணிகளும், புதிய பெரிய சந்தை 80 சதவீதத்திற்கு மேற்பட்ட பணிகளும் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் மாநகராட்சியில் நேற்று பட்ஜெட் தாக்கல் ஆனது. அந்த பட்ஜெட்டில் தற்போது உள்ள காந்தி சந்தையில் அரசு துறை அலுவலகங்கள் மற்றும் சில்லறை வணிகக் கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் காந்தி மார்க்கெட் பஞ்சப்பூருக்கு மாற்றப்பட உள்ளது.
மாற்றப்பட்டவுடன் காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டு புது பொலிவுடன் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது போல் காந்தி சந்தை முழுவதும் இடம் மாறுகிறது என்பது உறுதியாகி விட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision