மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் - பணி ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் - பணி ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
ஹோலி கிராஸ் கல்லூரியின் மறுவாழ்வு அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை மற்றும் சென்னை சமர்த்தனம் மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளையுடன் இணைந்து மாற்றுத்திறனாளிக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார்.

இதில் எஸ்.எஸ்.எல்.சி, பியூசி, ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு ஆகிய கல்வி தகுதிகளுடன் குறைந்த பார்வை செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் என 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

இதில் ஐடி, லாஜிஸ்டிக்ஸ், சில்லறை வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பதாரர்களின் தகுதியை பரிசோதித்தனர்.

பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முகாமில் பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மைய துணை இயக்குனர் மகாராணி, ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி கிறிஸ்டினா பிரிட்ஜெட் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO