மத்திய அமைச்சர் அமித்ஷாவின் புகைபடைத்தை செருப்பால் அடித்து எஸ் டி பி ஐ கட்சியினர் போராட்டம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே SDPI கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.
இதனை தொடர்ந்து அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தபோது காவல்துறைக்கும், கட்சியினருக்கு வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அமித்ஷாவின் புகைபடைத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தினர். இதனால் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision