பொன்மலைப்பட்டி மாவடி குளத்தில் சட்டவிரோத மண் கடத்தல் - பொதுப்பணித்துறை அதிகாரி அதிரடி ரெய்டு!

பொன்மலைப்பட்டி மாவடி குளத்தில் சட்டவிரோத மண் கடத்தல் - பொதுப்பணித்துறை அதிகாரி அதிரடி ரெய்டு!

திருச்சி பொன்மலைப்பட்டி மாவடி குளத்தில் சட்ட விரோதமாக மண் வெட்டி கடத்தியுள்ளனர்.

Advertisement 

தகவலறிந்து நள்ளிரவு நேரத்தில் உயிரைப் பணயம் வைத்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் நடத்திய திடீர் சோதனையின்போது ஒரு டிப்பர், ஒரு ஜேசிபி, ஒரு டிராக்டர் சிக்கியது. 

அங்கு இருந்த மண் கடத்தும் கும்பல் தப்பி ஓடி விட்டனர். மாவட்ட, மாநகர போலீஸ் எல்லை பிரச்சினை காரணமாக பிடிபட்ட லாரிகளை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்வதில் பல மணி நேரமாக தாமதமாகியது.

Advertisement

மேலும் பொன்மலைப்பட்டி, திருவெறும்பூர் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.