எழுந்து வா சுஜித்... 80 மணி நேர போராட்டம் - ஓராண்டு நினைவுகளுடன்...
கடந்த வருடம் இதே நாளினை யாராலும் மறந்து விட முடியாது. நாட்டையே உலுக்கிய போர்வெல் குழியில் விழுந்த சிறுவனுக்காக தமிழகமே தீபாவளி பண்டிகையை ஒத்திவைத்த தினம் இன்று. இரவு பகல் பாராமல் 80 மணிநேரம் போராடிய தினம் இன்று. ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே குரலாக மாறியது "எழுந்து வா சுஜித்". ஆனால் இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
Advertisement
கடந்த வருடம் திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகிலுள்ள சிறிய கிராமமான நாட்டுக்கட்டுப்பட்டியில் ஒரு குறுநடை போடும் குழந்தை தனது வீட்டின் அருகே செயலிழந்த போர்வெல்லில் விழுந்ததால், உலகம் முழுவதிலும் கவனத்தை ஈர்த்தது. தோல்வியுற்ற மீட்பு நடவடிக்கை 80 மணி நேரம் நீடித்தது, இது உலக நாடுகளில் உள்ள மக்களின் இதயங்களை கனத்தது. 365 நாட்களுக்குப் பிறகு, சுஜித் வில்சனின் கிராமவாசிகளும் பெற்றோர்களும் 2 வயது சிறுவனின் பயங்கரமான இழப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்பதால், பிரபலமற்ற கிராமத்தில் நிசப்தமே தொடர்கிறது.
ஒரு துன்பகரமான சம்பவத்தில், பிரிட்டோ ஆரோக்கியதாஸ், கலாமேரி தம்பதியின் இளைய மகன் சுஜித்வில்சன் கடந்த ஆண்டு இந்த நாளில் தனது சகோதரன் புனித்ரோஷனுடன் விளையாடும் போது அவரது வீட்டின் அருகிலுள்ள சுமார் 600 அடி ஆழம் கொண்ட செயலிழந்த போர்வெல்லில் தவறி விழுந்தார். பல்வேறு கூட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் உதவியுடன் மாநில அரசு முயற்சித்த போதிலும், 80 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சிறுவனை மீட்பதற்காக பணியில், அவர்களால் சிறுவனை உயிருடன் அழைத்து வரமுடியவில்லை. அக்டோபர் 29 அன்று சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அசாதாரண இழப்புக்கு பின் ஒரு வருடம் கழித்தும், சுஜித்வில்சனின் பெற்றோர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளியே மீண்டதாக தெரியவில்லை.
சுஜித் தவறி விழுந்த செயலிழந்த போர்வெல்லில் காங்கிரீட் கலவையால் மூடிய நிலையில், அங்கு சிறுவனை நினைவு செய்யும் வகையில் நினைவு கட்டிடங்கள் அமைக்க பெற்றோர்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் ஆசை ஆசையாய் வார்த்தைகள் வந்த நிலையில், தற்போது அங்கு ஒரு மலர் மாலை கூட இல்லை என்ற நிலை தான். லட்சக்கணக்கில் அரசு, அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனிநபர்களால் நிவாரண தொகை தம்பதியினருக்கு அளிக்கப்பட்டாலும், அது அவர்களை திருப்திப்படுத்தவில்லை. காசு மட்டும் போதுமா… உலகில் துரதிர்ஷ்டவசமான பெற்றோர்களாக நாங்கள் என கண்ணீர் வடிக்கிறார் தாய் கலாமேரி. சிறுவைனின் உயிரிழப்பிற்கு வந்த தொகையில் ஒரு பைசா கூட எடுத்து செலவு செய்ய மனமில்லை என கூறும் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ் மீண்டும் கட்டிட தொழிலுக்கு சென்றுள்ளார். இந்த ஓராண்டில் எந்தவித மாற்றமும் அவர்கள் வீட்டில் நடந்துவிடவில்லை.
Advertisement