திருச்சி அறிவியல் பூங்காவில் விர்ச்சுவல் ரியாலிட்டி கற்றல் மையம்

திருச்சி அறிவியல் பூங்காவில்  விர்ச்சுவல்  ரியாலிட்டி கற்றல் மையம்

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே சர் சி வி ராமன் பெயரில் குழந்தைகளுக்கு எளிய முறையில் கணிதம் மற்றும் அறிவியலை கொண்டு சேர்க்கும் விதமாக அறிவியல் பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 15 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த பூங்கா குழந்தைகள் எளிமையாக அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதத்தை கற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது ..

குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் 3டி திரையரங்குகள் கோளரங்கம் மினி தியேட்டர்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இன்னும் கூடுதல் வசதியாக 1.1 கோடியில் விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual reality )கற்றல் மையத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. சூரிய குடும்பம், சந்திராயனின் பணிகள், புவியியல், உலக வரைபடம், தாவர வளர்ச்சி, வன உயிரியல் பாதுகாப்பு, பாறைகள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 50க்கும் மேற்பட்ட வீடியோ விளக்க காட்சிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 24 குழந்தைகள் அறிவியல் வீடியோக்களை பார்க்கும் வகையில் 24 VR ஹெட்செட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 

ஒரு வீடியோ 10 முதல் 15 நிமிடம் வரை அதிகபட்சமாக 30 நிமிடம் வரை உள்ளது. வீடியோக்களை தேர்வு செய்வதற்காகவே இரண்டு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 30 முதல் 50 வரை தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உலக அரங்கில் கல்வி கற்றல் அதிக தொழில்நுட்பத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இது போன்ற முயற்சிகள் குழந்தைகள் அறிவியல் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கிறது. குழந்தைகளுக்கு விடுமுறை தினங்கள் வெறும் பொழுதுபோக்கு தினமாக இல்லாமல் இது போன்ற பயனுள்ள வகையில் மாற்றியாக அறிவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision