ஏரி தூர்வாரி, மரக்கன்றுகள் நட்டு மாற்றியமைக்கப்பட்ட கிராமம் - அசத்திய திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி‌ மற்றும் யங் இந்தியன் அமைப்பினர்!

ஏரி தூர்வாரி, மரக்கன்றுகள் நட்டு மாற்றியமைக்கப்பட்ட கிராமம் - அசத்திய திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி‌ மற்றும் யங் இந்தியன் அமைப்பினர்!

கல்வி என்பது புத்தகம்‌ சார்ந்த படிப்பை மட்டும் சொல்லித் தரும் இடமாக இல்லாமல் அதையும் தாண்டி சமுதாயத்திற்காகவும் நாட்டின மேம்பாட்டிற்காகவும் பல உதவிகளையும் நலத்திட்ட பணிகளையும் கற்றுத்‌தருவதே. அந்த வகையில் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள், மண்ணச்சநல்லூர் அருகே மூன்று கிராமங்களை தத்தெடுத்ததோடு, இந்த இக்கட்டான காலகட்டத்திலும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து  வெற்றிகரமாக வழங்கி வருகின்றனர். 

Advertisement

கொரோனா தொற்று காலம் தொடங்குவதற்கு முன்பாக திருச்சி ஹோலிகிராஸ் மாணவிகள் மண்ணச்சநல்லூரில் உள்ள 23 கிராமங்களை தத்தெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஏரி குளம் குட்டைகளை சுத்தம் செய்வது மற்றும் தூர்வாருவது என பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதனைத் தொடர்ந்து தற்போது இந்த கொரோனா காலகட்டத்தில் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் யங் இந்தியன் அமைப்பு இணைந்து திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தளுதாளப்பட்டி கிராமத்தை தேர்வு செய்து அங்கு பசுமைப் பரப்பை உருவாக்கும் விதமாக சில நாட்களுக்கு முன்பு பணிகளை தொடங்கினர். 

Advertisement

இந்நிலையில் தளுதாளப்பட்டியில் உள்ள ஏரி ஒன்றை தூர்வாரி அங்கு உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி முதற் கட்ட பணிகளைத் தொடங்கினர். அதன் பிறகு 1000 பனை விதைகளை நட்டும், சுமார் 450 மரக்கன்றுகளை நட்டும் அக்கிராமத்தை பசுமை பூக்கச் செய்துள்ளனர். 11 வகையிலான சுமார் 450 மரக்கன்றுகளை நட்டு வைத்து அதனை பராமரித்து வருகின்றனர். 

இப்பணிகளை திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா பிரிட்ஜிட், கல்லூரி சுற்றுச்சூழல் விரிவாக்க டீன் சுஜாதா இளங்கோவன் மற்றும் தளுதாளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் சாந்தோ ஆகியோர் இணைந்து செய்து அக்கிராம முழுவதும் நலத்திட்ட பணிகளை செய்து நிறைவு செய்துள்ளனர்.

✍️ ஜெரால்டு