தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - தொடர்ந்து கலக்கும் திருச்சி அமைப்பினர்!
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - தொடர்ந்து கலக்கும் திருச்சி அமைப்பினர்!
இந்த கொரோனா காலகட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது வெறும் வாய் வார்த்தையால் பாராட்டி விட முடியாது. தங்களுடைய உடல்நலம், குடும்பம், சூழல் என அனைத்தையும் தாண்டி கடந்த 7 மாதங்களாக பொதுமக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றிய அவர்களுடைய சேவை என்பது மகத்தான ஒன்று
advertisement
இது போன்று மக்களுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை வழங்கி வருகிறது திருச்சி எம்பவர் டிரஸ்ட். கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் சாமானிய மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு மேலாக உதவி வருகிறது இவ்வமைப்பு. அதன் தொடர்ச்சியாக திருச்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
அரிசி, துவரம் பருப்பு, பாசி பருப்பு, கொண்டைக்கடலை, சென்னா, சர்க்கரை, சமையல் எண்ணெய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு, மாஸ்க் என 15 வகையான பொருட்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷீலா, தமிழாசிரியர் பச்சையம்மாள், எம்பவர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.