திருச்சியில் குறைந்து வரும் கொரோனா - காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக சிறப்பு கோவிட் மையத்தில் ஆளில்லை!

திருச்சியில் குறைந்து வரும் கொரோனா - காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக சிறப்பு கோவிட் மையத்தில் ஆளில்லை!

திருச்சியில் குறைந்து வரும் கொரோனா - காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக சிறப்பு கோவிட் மையத்தில் ஆளில்லை! 

Advertisement

திருச்சியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இதுவரையில் சுமார் 12,500ற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொடக்க காலக்கட்டத்தில், அரசு மருத்துவமனையில் சிறிய அளவிலான கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. பின்பு தொற்று எண்ணிக்கை அதிகமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவை கொரோனா வார்டாக மாற்றினர். அதனைத் தொடர்ந்து அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் திருச்சி காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகள் சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. 

இங்கு கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டும்  5 நாட்களுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.  வெளிநாடுகளிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விமானத்தில் வரவழைக்கப்பட்டவர்களும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களும் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

சுமார் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பாரதிதாசன் சிறப்பு கோவிட் மையத்தில் உணவு அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.  அங்கு உள்ளவர்களுக்கு ஏதாவது அவசர உதவி என்றால் கூட உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக மருத்துவக் குழுவும் அங்கேயே தயார் நிலையில் இருந்து வந்தது.


கடந்த சில வாரங்களாக திருச்சியில் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக  தான் உள்ளலு. இந்த நிலையில்தான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள கோவிட் சிறப்பு சிகிச்சை மையம் கடந்த சில வாரங்களாக காலியாக ஆளில்லாமல் இருந்து வருகிறது. மக்களிடையே இச்செய்தி பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.