லால்குடி விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தில் நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி

லால்குடி விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தில் நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசனம் குறித்த 3 நாள் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம்வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் (SSEPERS) 2025 - 2026

B2.bஉள் மாநில அளவிலான விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்து 3 நாள் பயிற்சி வகுப்புகள் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர்முனைவர் கதிரேசன்,

உயிர் உரங்கள் சிறுதானிய பயிர் வகைகள் மற்றும் மதிப்பூட்டல் பதப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார். உதவி பேராசிரியர் செல்வக்குமார் வயர்லெஸ் ஆட்டோமேட்டிக் நுண்ணீர் பாசனம் மற்றும் மண்ணின் ஈரத்தன்மை நுண்ணீர் பாசனத்தால் எப்படி அதிக மகசூல் எடுக்கலாம், உரம் மற்றும் மின் சாரத்தை மிச்சப் படுத்தலாம் உள் ளிட்டவைகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

இந்த பயிற்சி வகுப்பில் தச்சன் குறிச்சி, பூவாளூர், செம்பரை, கோமாகுடி கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பகுதியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மேலாளர் சபரி செல்வன், உதவி மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision