மோடி மிரட்டினால் பயப்படுவதற்கு நாங்கள் அதிமுக அல்ல - அமைச்சர் மகேஸ் பேச்சு

மோடி மிரட்டினால் பயப்படுவதற்கு நாங்கள் அதிமுக அல்ல - அமைச்சர் மகேஸ் பேச்சு

திருச்சி மாவட்டம், மணப்பாறை திண்டுக்கல் மெயின் சாலையில் மாட்டுச்சந்தை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது.....

நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது. அதனால் தான் பிரதமர் மோடி இப்போது தான் அவ்வபோது வந்து சென்று கொண்டிருக்கிறார். புயல், வெள்ளம் தாக்கிய போது, மீனவர்கள் இறந்த போது, நீட் தேர்வால் 22 மாணவ- மாணவிகள் இறந்த போது வராத மோடி ஏன் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் வராத மோடி இப்படி எதற்கும் வராத மோடி. இப்போது அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றால் தேர்தல் வந்து விட்டது என்று அர்த்தம்.

அழிப்பேன், ஒழிப்பேன் என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் எங்கள் முதல்வர் எழுதிய கடிதத்தில் ஆளும் கட்சியாக இருந்த போது ஏதும் செய்யவில்லை. எதிர்கட்சியாக இருக்கும் போது ஏதாவது செய்வீர்களாக என்று நாகரீகமாக கேட்டிருந்தார் என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், மோடி மிரட்டினால் அடிபணிய இது அதிமுக அல்ல. அண்ணாவின் தி.மு.க. அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு. மோடியின் மிரட்டல் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது என்று கூறினார்.

கலைஞரின் சிலையை திறந்து வைத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது..... இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறப் போகிறது. காஷ்மீர், டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு இப்படி இந்தியா கூட்டணி அமைந்து விட்டது. தமிழ்நாடு தான் இதற்கு வழிகாட்டுகிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி வரப்போகிறது என்று கூறினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன் , சபியுல்லா, மாவட்ட கழக அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மணப்பாறை நகரக் கழகச் செயலாளர் மு.மா. செல்வம், மணப்பாறை நகர மன்ற தலைவர் கீதாமைக்கேல்ராஜ், மணப்பாறை ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி மணப்பாறை ஒன்றிய குழுத்தலைவர் அமிர்தவல்லி ராமசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision