ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு பட்டியல்
ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது நாளை (03.03.2024) முதல் அமலுக்கு வருகின்றது. தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை மட்டுமல்லாமல் நெய், தயிர், பால் பௌடர், பாதாம் பௌடர், குல்பி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள், குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வகையில் ஆவினில் பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் ஆவின் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 65 மி.லிட்டர் சாக்கோபார் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆகவும், வென்னிலா ரூ.28 முதல் ரூ.30 ஆகவும், கிளாசிக் கோன் வென்னிலா மற்றும் கிளாசிக் கோன் சாக்லேட் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision