துப்பாக்கி ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தகவல்

துப்பாக்கி ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பாராளுமன்ற தேர்தல் 2024. தேதி அறிவிக்கப்பட்டதன் காரணமாக (16.03.2024) பிற்பகல் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரகப் பகுதி மற்றும் மாநகரப்பகுதியில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள்,

தங்களது படைக்கலன்களை, தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக ஒப்படைத்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பிறகு, மீள தங்கள் படைக்கலனை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஒப்படைக்கத் தவறும் நபர்கள் மீது இந்திய தண்டணை சட்டம் பிரிவு -188-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision