ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாய் களமிறங்கிய சேவைப்போராளி பிளட் ஷாம்!!

ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாய் களமிறங்கிய சேவைப்போராளி பிளட் ஷாம்!!

இந்த உலகில் யாருமற்று இருப்பது எத்தனை கொடுமையானதோ அதைவிட கொடுமையானது யாரும் இல்லாமல் இறப்பது. அப்படி ஆதரவற்று இறப்பவர்களின் உடலுக்கு அவர்களின் உறவினர்களுக்கு மேலாய் அவர்களுடைய இறுதி சடங்கு ஏற்று செய்து வருகிறார் திருச்சியை சேர்ந்த பிளட் - ஷாம். இவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இவரின் அடைமொழியும் மிகப் பெரும் சான்று.

தமிழகத்திலேயே 26000 ரத்ததான கொடையாளர்கள் கொண்ட உறுப்பினர் குழுவின் நிர்வகித்து வருகிறார். தமிழ்நாடு குருதி கொடையாளர் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். திருச்சியில் தொடங்கிய இரத்ததான பணி தற்போது தமிழகம் முழுவதும் விரிவடைந்துள்ளது. கோரிக்கை வைத்த சில மணி நேரத்தில் ரத்தத்தை ஏற்பாடு செய்து பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். இதனாலேயே அவருடைய பெயருக்கு முன்னால் பிளட் ஒட்டிக் கொண்டது. புது வாழ்வு சமூக நல அறக்கட்டளை தொடங்கி நிறுவனராக செயல்பட்டு வருகிறார்.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்த ஷாமிடம் இந்த எண்ணம் எப்போது தோன்றியது என்று கேட்டேன், அவர் அளித்த பதில் நம் எல்லோரையும் வியப்புக் கொள்ளவே செய்தது. 2006 ஆம் ஆண்டில் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது அவருடைய நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவரது உடலை வைக்க திருச்சி அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் இடமில்லை அங்கு ஏற்கனவே நிறைய ஆதரவற்றவர்கள் உடல்கள் இருந்ததே இதற்கு காரணம். அன்றைய தினம் அவர் நண்பரோடு சேர்த்து ஆறு ஆதரவற்றவர்களை உடலையும் சேர்த்து அடக்கம் செய்துள்ளார். அப்படியே இன்றுவரை தொடர்ந்து 1130க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடலை இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் கொரானாத்தொற்று காலகட்டத்தின் உயிரிழந்த 20 பேரின் உடல்களை 40 மாவட்டங்களுக்கு அவர்களுடைய வறுமை நிலையை கருத்தில் கொண்டு இலவசமாக ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். கோவிட் தொற்று ஏற்பட்ட பின்பு குணமடைந்து உறவினர்களால் கைவிடப்பட்ட 150 அமரர்கள் திருச்சி உட்பட நான்கு மாவட்டங்களிலும் தகனம் செய்துள்ளார். இலவச ஆம்புலன்ஸ் சேவை அமரர் ஊர்தி சேவை என்று மக்களுக்கு எல்லா வகையிலும் உதவிட முயற்சித்து வருகிறார்.ஷாம் தன்னுடைய சேவை குறித்து பகிர்ந்து கொள்ளும் போது, "நம்மால் முடிந்த வரை இந்த உலகில் யாருக்கேனும் பயனாக இருந்துவிட வேண்டும் அப்படி ஒரு ஒரு சிறு முயற்சி தான் இவை அனைத்துமே  திருச்சி மாவட்ட விலங்கின பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறேன். சாலையோரத்தில் அடிபட்டுக் கிடந்த 989 கால்நடைகளையும் அடக்கம் செய்து இருக்கிறோம். அதுமட்டுமின்றி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரத்ததான முகாம், 725 கிராமங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடத்தியுள்ளோம்.

நான்காம் நிலையை அடைந்த 43 புற்று நோயாளிகள் மற்றும் 28 எய்ட்ஸ் நோயாளிகளை அவர்கள் வீட்டில் பராமரித்து கொண்டிருக்கிறோம். இந்த பூமியில் மனிதராக பிறந்த அனைவருமே ஒவ்வொருவருக்கும் உறவினர்கள் தான். அப்படிதான் என்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து வருகிறேன். இதற்குப் பின்னால் என்னுடன் இணைந்து செயல்படும் அனைத்து தன்னார்வலர்களும் என்னை தொடர்ந்து பயணிக்க உதவி வருகின்றனர். அவர்களுடைய ஒத்துழைப்பும், சேவையையுமே என்னை இன்று உலகிற்கு அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறது" என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn