போலி தங்கத்தை கொடுத்து மோசடி செய்த ஏழு நபர்கள் கைது

போலி தங்கத்தை கொடுத்து மோசடி செய்த ஏழு நபர்கள் கைது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் சரகம், அம்மன்குடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமாக ஜீயபுரம் அக்ரஹாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகை கடையில், வேலை செய்து வரும் அம்மன்குடியைச் சேர்ந்த வேலுசாமி மகன் அன்பழகன் (37) என்பவர், கடந்த 02 ஆம் தேதி நகை கடையில் தனியாக இருந்தார்.

அப்போது இரண்டு கார்களில் வந்த 7 நபர்கள் நீங்கள் நகை கடையில் வேலை செய்கிறீர்களா? இல்லை கடை வைத்துள்ளீர்களா? என்று விசாரித்துள்ளனர். பின்னர் தங்களிடம் 2 கிலோ தங்க கட்டிகள் உள்ளது என்றும், அதை நாங்கள் மார்கெட் விலையை விட குறைவான விலைக்கு தருகிறோம், அதற்கு முன்பணமாக ரூபாய் 50,000 கொடுங்கள், தங்க கட்டியை நாங்கள் கொண்டு வந்து கொடுக்கும் போது மீத பணத்தை கொடுக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு மேற்படி அன்பழகன், தன் ஓனரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறியதற்கு என்னங்க குறைந்த விலைக்கு தரோம்னு சொல்லுறேன் நீங்க ஏன் தயங்குறிங்க.

என்னிடம் உள்ள பொருள் தரமானவை நம்பி வாங்கலாம் என்று சொன்னதாகவும், அதற்கு அன்பழகன் தன்னிடம் தற்சமயம் அவ்வளவு பணம் இல்லை என்றும், வெறும் 5,000 ரூபாய் மட்டுமே உள்ளது என்றும் கூறியுள்ளர். அதற்கு மேற்படி காரில் வந்த நபர்கள் இந்த பணத்திற்கு ஒரு தங்க கட்டியை மட்டும் இப்போது வைத்து கொள்ளுங்கள் என்று கூறி ஒரு கட்டியை கொடுத்துவிட்டு மீதி பணத்தை மற்ற தங்க கட்டிகள் கொடுத்துவிட்டு வாங்கிகொள்கிறோம் என்று கூறியுள்ளார்கள். குறைந்த பணத்திற்கு தங்க கட்டியை கொடுத்ததால் சந்தேகமடைந்த அன்பழகன் அவர்கள் தன்னிடம் கொடுத்த தங்க கட்டியை சோதனை செய்து பார்த்தபோது அது தங்க கட்டி இல்லை போலியானது என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அன்பழகன், கடந்த 4 ம் தேதி மாலை ஜீயபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது கடந்த 5ம் தேதி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குபட்ட முக்கொம்பு அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி காரில் வந்த நபர்களிடம் விசாரணை செய்தனர்.

அதில் மேற்படி நகை கடையில் போலி தங்க கட்டியை கொடுத்து ஏமற்றிய நபர்கள் என தெரிய வந்ததின் பேரில் மேற்படி நபர்களை கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்ட போது மணப்பாறை சேர்ந்த சகாய ஆரோக்கிய தாஸ் (40), திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகன் (59), கரூரைச் சேர்ந்த சூசைராஜ் (40), திருவண்ணாமலை ஆதாம் சேட்டு (40), மணப்பாறையை சேர்ந்த தங்கதுரை (41), குன்னூர் சேர்ந்த கனகராஜ் (46), மற்றும் கரூரைச் சேர்ந்த பாண்டியன் (55) ஆகிய நபர்கள் என்பது தெரியவந்தது. 

மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மேற்படி குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு கார்கள், தலா 100 கிராம் எடையுள்ள 35 போலி தங்க கட்டிகள் மற்றும் ரூ.20,000/- பணம் ஆகியவற்றினை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision